வழிபாடு
பூஜைகள் மற்றும் திருவிழாக்கள்
ஆண்டுதோறும் கொண்டாடப்படும் பாரம்பரிய வழிபாடுகள்.
- 01
பெரிய பூஜை
ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மார்கழி மாதத்தில் பாரம்பரிய முறைப்படி நான்கு நாட்கள் பெரிய பூஜை நடைபெறுகிறது.
- 02
சித்ரா பௌர்ணமி
ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி அன்று சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது.
- 03
புரட்டாசி சனிக்கிழமை பூஜைகள்
புரட்டாசி மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் மாலை நேரத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது.
- 04
மகாளய அமாவாசை
புரட்டாசி மகாளய அமாவாசை அன்று முன்னோர்களை நினைவுகூர்ந்து மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்து அன்னதானம் வழங்கப்படுகிறது.
- 05
வைகாசி திருவிழா
திருமங்கலம் பாண்டியகுல க்ஷத்ரிய நாடார்கள் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளி மாரியம்மன் திருக்கோவிலின் வருடாந்திர வைகாசி 13 நாள் திருவிழாவில், நமது பங்காளிகள் பாரம்பரிய முறைப்படி பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று சிறப்பு செய்கின்றனர்.
இந்த ஆண்டின் குறிப்பிட்ட தேதிகளுக்கு, நிகழ்வுகள் பக்கத்தைப் பார்க்கவும்.
நிகழ்வுகள்